முகப்பு

மெரீனா

வழக்கம் போல் ஏராளமான குறுங்கவிதைகளும் சில நெடுங்கவிதைகளும் அடங்கிய தொகுப்பு. இதற்கு முன்பு எந்தத் தொகுப்பிலும் வெளிவராத கவிதைகள் அடங்கியது. ‘வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை’ தொகுப்பின் இலக்கிய வாரிசு. கிண்டில் மின்னூலாக வெளிவரும் இரண்டாம் கவிதைத் தொகுப்பு. ஒப்பீட்டு ரீதியில் சிறந்த நூலான மெரீனா, ரஷ்யாவின் மிக உயர்ந்த சிவிலியன் இலக்கிய விருதைப் பெற்றது.

கிண்டில் மின்னூலை வாங்க »



நகைச்சுவைச் சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், திரைக்கதைகள், மொழிப் பரிசோதனைகள். பேயோன் கடந்த 18 ஆண்டுகளில் எழுதிய பல நூறு படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. சமூகம், மண வாழ்க்கை, பெண்கள், தந்தைமை, மனித அரசியல், காதல், தத்துவம், சமூகம், இசை, சினிமா, மருத்துவம், இலக்கியம், கவிதை, புத்தகங்கள் என்று பல தலைப்புகளைத் தொடும் புத்தகம் இது. தொடக்கத்திலிருந்து இறுதி வரை மிக விரிவாக மெருகேற்றி செம்மையாக்கப்பட்டுள்ளது. 190 படைப்புகள், கிண்டிலில் 855 பக்கங்கள்.


கிண்டில் மின்னூலை வாங்க »

நான் சொல்ல வந்ததே வேறு


2009ஆம் ஆண்டில் தொடங்கி ஜனவரி 2018 வரை எழுதப்பட்ட நுண்பதிவுகளிலிருந்து தேர்ந்தெடுத்த மாபெரும் தொகுப்பு. கலை, இலக்கியம், அரசியல், பண்பாடு, தத்துவம், உறவுகள், தனிமனிதம் எனப் பல விஷயங்களை ஏறி மிதிக்கும் நகைச்சுவை. குறுங்கதைகள், பொன்மொழிகள், விமர்சனம், கவிதைகள், வெண்பாக்கள் அடங்கியவை.

கிண்டில் மின்னூலை வாங்க »



வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை

கடந்த 12 ஆண்டுகளில் எழுதியதிலிருந்து தேர்ந்தெடுத்த பல நூறு கவிதைகள். நகைச்சுவை, பகடி, பரிசோதனை, கதைகள் ஆகிய அம்சங்களை உள்ளிட்ட இக்கவிதைகள் எந்த வகைப்பாட்டுக்குள்ளும் அடக்க முடியாதவை. கவிதையை விரும்புபவர்கள், வெறுப்பவர்கள் ஆகிய இரு சாராருக்கும் உகந்த கவிதைகள் இவை.

கிண்டில் மின்னூலை வாங்க »



ஆசிரியரைப் பற்றி

தமிழின் முதல் ட்விட்டர் நூலை எழுதியவர். 15க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கும் முதல் மற்றும் ஒரே கற்பனைப் பாத்திரம். கதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதும் முழுநேர எழுத்தாளர், பத்தியாளர், ஓவியர். 1967இல் பிறந்த இவர், ஒரு மனைவிக்கும் மகனுக்கும் சொந்தக்காரர்… » மேலும்